அமீரக செய்திகள்
படகு கவிழ்ந்ததில் பலியானவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இரங்கல்
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் 300 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 58 பேர் பலியாகியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஒற்றுமையையும் தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் (MoFA) மத்திய ஆப்பிரிக்க குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், அவர்களின் பெரும் இழப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது, அத்துடன் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
#tamilgulf