அமீரக செய்திகள்கத்தார் செய்திகள்
கத்தார் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு UAE தலைவர்கள் வாழ்த்து

UAE:
கத்தார் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானிக்கு ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்னர்.
தேசிய தினத்தை முன்னிட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
ஹிஸ் ஹைனஸ் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர்; மற்றும் துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் கத்தார் அமீருக்கும், பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானிக்கும் வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளனர்.
#tamilgulf



