அமீரக செய்திகள்
இலையுதிர் பருவத்தின் முடிவு… குளிர்காலம் டிசம்பர் 22 தொடங்குகிறது!

UAE: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலையுதிர் காலத்தின் முடிவில் இருப்பதாகவும், குளிர்காலம் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 22-23 இல் தொடங்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) இயக்குனர் டாக்டர் அஹ்மத் ஹபீப் கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “இதுவரை, நாடு சராசரி வெப்பநிலையை அனுபவித்து வருகிறது. உண்மையில், இது சராசரியை விட சற்று அதிகமாக உள்ளது. இது ஆங்காங்கே வெப்பநிலை வீழ்ச்சியுடன் தொடரும், இது டிசம்பர் மூன்றாவது வாரம் குளிர்காலம் தொடங்கும் வரை ஓரிரு நாட்களுக்கு நாம் அனுபவிக்கும் காலநிலையாகும்.
“பொதுவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஜனவரி மிகவும் குளிரான மாதமாகும், பிப்ரவரியில் டிசம்பரை விட குறைவான வெப்பநிலை பதிவாகும்,” என்று கூறினார்.
#tamilgulf



