அமீரக செய்திகள்
Abu Dhabi: முக்கிய சாலைகளில் ஒன்று இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்

Abu Dhabi
அபுதாபியின் முக்கிய சாலைகளில் ஒன்று இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று அபுதாபி அதிகாரிகள் இன்று அறிவித்தனர்.
அல் தஃப்ராவில் உள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் இன்ட் ரோட்டின் (E11) வலது பாதையை டிசம்பர் 6 (காலை 12 மணி) முதல் டிசம்பர் 30 (காலை 5 மணி) வரை வாகன ஓட்டிகளுக்கு அணுக முடியாது என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.
இந்த மூடல் அபுதாபியை நோக்கி செல்லும் பாதையை பாதிக்கும் என ஐடிசி தெரிவித்துள்ளது.
வரைபடம்:
சாலையைப் பயன்படுத்துவோர் கவனமாகவும், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
#tamilgulf