இரண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி 2024 ஆம் ஆண்டை தொடங்கிய எதிஹாட் ஏர்வேஸ்

UAE:
எதிஹாட் ஏர்வேஸ் இரண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி 2024 ஆம் ஆண்டை தொடங்கியுள்ளது. அபுதாபியிலிருந்து இந்தியாவின் கேரளப் பகுதியில் உள்ள கோழிக்கோடு (CCJ) மற்றும் திருவனந்தபுரத்திற்கு (TRV) தினசரி விமானங்கள் ஜனவரி 1, 2024 அன்று தொடங்கப்பட்டன.
ஒவ்வொரு இடத்திற்கும் non-stop விமானங்களை எதிஹாட் இயக்கும். இதன் மூலம் மொத்த இந்திய நுழைவாயில்களின் எண்ணிக்கையை 10 ஆக உயர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், விமான நிறுவனம் கொல்கத்தாவிற்கு சேவைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் கிழக்கு இந்தியாவை உலகளாவிய இடங்களுடன் இணைக்கிறது. மேலும், விமான நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான இரண்டு வழித்தடங்களான மும்பை மற்றும் டெல்லிக்கான விமானங்களின் சேவையை ஒரு நாளைக்கு இரண்டில் இருந்து ஒரு நாளைக்கு நான்கு விமானங்களாக உயர்த்தியுள்ளது.



