அமீரக செய்திகள்உலக செய்திகள்
கனமழை காரணமாக வியன்னாவில் உள்ள UAE குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அழைப்பு

வியன்னாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஆஸ்திரியா நாட்டில் நிலவும் வானிலை சீர்குலைவுகள், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்குள்ள குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தூதரகம் குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அவசர காலங்களில், குடிமக்கள் 0097180024 அல்லது 0097180044444 என்ற ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களுடன் தொடர்புகொள்வதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் சேவையான தவாஜூடியில் பதிவு செய்யுமாறு குடிமக்களை தூதரகம் வலியுறுத்தியது.
#tamilgulf