அமீரக செய்திகள்
ஜூன் 2 முதல் அஜ்மானில் உள்ள ஒரு முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்
அஜ்மானில் உள்ள ஒரு முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
ஜூன் 2, ஞாயிற்றுக்கிழமை முதல் ஷேக் ரஷித் பின் சயீத் தெருவில் போக்குவரத்து மாற்றப்படும் என்று அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.
அஜ்மான் துறைமுகம் மற்றும் நகர மையத்தில் இருந்து ஷேக் கலீஃபா இன்டர்சேஞ்ச் நோக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த திசை திருப்பப்படும்.
போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ஷேக் ரஷித் பின் சயீத் தெரு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மாற்றுப்பாதையின் போது போடப்படும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக்கொண்டனர்.
#tamilgulf