அமீரக செய்திகள்
இன்றைய வானிலை: காற்று சில சமயங்களில் வேகமாக வீசக்கூடும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் தெளிவாக இருக்கும், சில பகுதிகள் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
மணிக்கு 10-25 கிமீ வேகத்தில் இருந்து 40 கிமீ வேகத்தில் காற்று சில சமயங்களில் வேகமாக வீசக்கூடும் என்பதால் தூசி நிறைந்த சூழல் சில பகுதிகளில் ஏற்படக்கூடும்.
அபுதாபியில் 48 டிகிரி செல்சியஸ் மற்றும் துபாயில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை காலை வரை இரவில் ஈரப்பதமாக இருக்கும்.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அலைகள் லேசானது முதல் மிதமானதாக இருக்கும்.
#tamilgulf