அமீரக செய்திகள்
இரவு மற்றும் அதிகாலையில் கடல் சீற்றமாக இருக்கும்- வானிலை அறிவிப்பு

தேசிய மைய வானிலை ஆய்வு (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்றைய வானிலை சில நேரங்களில் தூசி நிறைந்ததாக இருக்கும், சில பகுதிகளில் மழைப்பொழிவுடன் தொடர்புடைய சில வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
அபுதாபி மற்றும் துபாயில் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். குறைந்தப்பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருக்கும்.
லேசானது முதல் மிதமான காற்று வீசுவதால் தூசி மற்றும் மணல் வீசும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் கடல் சற்று முதல் மிதமாக இருக்கும், இரவு மற்றும் அதிகாலையில் கடல் சீற்றமாக இருக்கும்.
#tamilgulf