அபுதாபி வந்த ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ்!

BAPS இந்து கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அபுதாபி வந்துள்ளார்.
பிப்ரவரி 14 அன்று BAPS இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், மஹந்த் சுவாமி மகாராஜை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சகிப்புத்தன்மை அமைச்சர் ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அன்புடன் வரவேற்றார் என்று அபுதாபியின் BAPS இந்து மந்திரின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மேலும் கூறுகையில், “UAE -க்கு வரவேற்கிறோம். உங்கள் முன்னிலையில் எங்கள் தேசம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருணையால் நாங்கள் தொடபட்டோம், உங்கள் பிரார்த்தனைகளை உணர்கிறோம்” என்றார். அதற்கு பதிலளித்த மஹந்த் சுவாமி மகராஜ், “உங்கள் அன்பு மற்றும் மரியாதை எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர்கள் சிறந்தவர்கள், நல்லவர்கள் மற்றும் பெரிய மனதுடையவர்கள்” என்று கூறினார்.
BAPS இந்து மந்திர் மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கல் கோயிலாக மாற உள்ளது. அபு முரைக்கா பகுதியில் அமைந்துள்ள இந்த கம்பீரமான அமைப்பு, கலாச்சார அமைதி மற்றும் ஒத்துழைப்பின் உணர்வை வெளிப்படுத்துகிறது மற்றும் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான நீடித்த நட்புறவுக்கு ஒரு சான்றாக அமைகிறது.