ஏழு மாத கால நடமாடும் உணவு கண்காட்சியை ஏற்பாடு செய்த சவுதி சமையல் கமிஷன்!

Saudi Arabia(ரியாத்)
பிரபலமான தேசிய உணவுகள் மற்றும் பாரம்பரிய இனிப்புகளை சிறப்பிக்கும் வகையில் ஏழு மாத கால நடமாடும் உணவு கண்காட்சியை சவுதி சமையல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் சவுதி உணவு பிரியர்களின் விருப்பமான இனிப்பு வகையான ஜரிஷ் மற்றும் மக்ஷுஷ் இனிப்பு வகைகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். நிகழ்ச்சியின் கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ரியாத்தில் தொடங்கும் இந்த நடமாடும் உணவுக் கண்காட்சி, மக்கா, மதீனா, தபூக், ஜாஃப், வடக்கு எல்லைகள், ஹைல், காசிம், கிழக்கு மாகாணம், நஜ்ரான், ஜசான், ஆசிர் மற்றும் அல்-பஹா ஆகிய இடங்களை சென்றடையும்.
நேரடி சமையல், ருசிக்கும் அமர்வுகள், உபகரணங்கள் மற்றும் பொருட்களின் காட்சி, விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய சமையல் பற்றிய திரைப்பட திரையிடல் ஆகியவையும் அரங்கேற்றப்படும். சந்தைகள், பொது இடங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற சமூக மையங்களுக்குச் சென்று சவுதியின் பெயருடன் தொடர்புடைய உள்ளூர் வளங்களை வளர்த்து பிரபலப்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆணையம் முறையே ஜாரிஷ் மற்றும் மக்ஷுஷை நாட்டின் தேசிய உணவாகவும் இனிப்பாகவும் நியமித்தது குறிப்பிடத்தக்கது.