ஓமன் செய்திகள்
ஓமானில் பல இடங்களில் மழை; யான்குல் பகுதியில் அதிகமாக 22 மிமீ மழை பதிவு

மஸ்கட்: ஓமனில் மேக மூட்டம் தொடர்வதால் செவ்வாய்க்கிழமை பல இடங்களில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி வரை ஓமன் சுல்தானகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை குறித்த தரவுகளை விவசாய வளம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகம் வெளியிட்டது.

யான்குல் பகுதியில் அதிகமாக 22 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து சோஹர் 12 மிமீ, இப்ரியின் 8 மிமீ, மாதா மற்றும் அல் புரைமியில் தலா (1 மிமீ) மழையும் பதிவாகியுள்ளது
மழை தாவரங்களின் பரப்பை அதிகரிக்கிறது, பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது மற்றும் அணைகளில் நீர் இருப்பை அதிகரிக்கிறது என்று அமைச்சகம் கூறியுள்ளது.
#tamilgulf



