அமீரக செய்திகள்
பிரசிடெண்ட் கோப்பையை வென்ற அல் வாஸ்லுக்கு ஷேக் ஹம்தான் வாழ்த்து தெரிவித்தார்!

அல் ஐனில் உள்ள ஹஸ்ஸா பின் சயீத் மைதானத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற பிரெசிடெண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் அல் வாஸ்ல் கிளப் 4-0 என்ற கோல் கணக்கில் சக துபாய் கிளப் அல் நஸ்ரை வீழ்த்தி வெற்றி பெற்றது.
துபாயின் பட்டத்து இளவரசரும், துபாயின் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், கிளப்பையும் அதன் புரவலர்களையும், குறிப்பாக ஷேக் அஹ்மத் பின் ரஷித் அல் மக்தூமை வாழ்த்தினார்.
அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய சீசனில் அல் நஸ்ர் கிளப் அவர்களின் செயல் திறனுக்காகவும், அல் ஐன் நகரில் உள்ள ஹஸ்ஸா பின் சயீத் ஸ்டேடியத்தில் நடந்த பிரசிடென்ட் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியதற்காகவும் நாங்கள் வாழ்த்து கூறுகிறோம்” என்றார்.
#tamilgulf



