தேசிய தினத்தை முன்னிட்டு ஷார்ஜா அரசாங்க ஊழியர்களுக்கு நான்கு நாள் விடுமுறை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினத்தை(52nd National Day) முன்னிட்டு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்படும் என ஷார்ஜா அரசின் மனிதவளத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவில், அதிகாரபூர்வ விடுமுறை தேதிகள் டிசம்பர் 2 சனிக்கிழமை முதல் டிசம்பர் 4 திங்கள் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 5 செவ்வாய் அன்று வேலை மீண்டும் தொடங்கும்.
துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தனியார் துறை மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட அதே தேதிகள் இவை என்றாலும், ஷார்ஜாவில் உள்ளவர்களில் மேலும் ஒருநாள் விடுமுறை கூடுதலாக கிடைக்கும். ஷார்ஜா எமிரேட் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், அரசாங்க ஊழியர்கள் நான்கு நாள் வார விடுமுறையை அனுபவிப்பார்கள்.
2022 ஆம் ஆண்டு முதல் எமிரேட்டில் குறுகிய வேலை வாரம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனவரி 2022 -ல் சனி-ஞாயிறு வார இறுதியை ஐக்கிய அரபு எமிரேட் ஏற்றுக்கொண்டபோது, ஷார்ஜா தனது அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது.