சவுதி செய்திகள்
சவுதி எல்லையில் பல போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் முறியடிப்பு
நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளின் பல முயற்சிகளை எல்லைக் காவல்படை முறியடித்துள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசீரின் அல்-ரபோஹ் மற்றும் அல்-ஃபர்ஷா பகுதிகளில் அதிகாரிகள் முறையே 125,500 மற்றும் 11,893 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.
ஆசீரின் தஹ்ரான் அல்-ஜனூப் பகுதியில், 27 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற மூன்று எத்தியோப்பியாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 911 என்ற எண்ணிலும், மற்ற பிராந்தியங்களில் உள்ளவர்கள் 999 என்ற எண்ணிலும் போதைப்பொருள் கடத்தல் அல்லது விற்பனை தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
#tamilgulf