ஓமன் செய்திகள்

கடல் கொந்தளிப்பாக இருக்கும் – ஓமன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஓமன் சுல்தானகத்தின் சில பகுதிகளில் வேகமான காற்று வீசுவதால் கடல் அலைகள் எழும்பவும், பாலைவனப் பகுதிகளில் தூசுகள் எழவும் வாய்ப்புள்ளதாக ஓமன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு பொது இயக்குநரகம் கூறியதாவது:- “தற்போது தென்மேற்கு காற்று தெற்கு அல் ஷர்கியா, மஸ்கட் மற்றும் அல்-வுஸ்தா கவர்னரேட்டுகளின் சில பகுதிகளில் வேகமாக வீசுகிறது. இதனால் கடல் அலைகள் எழக்கூடும் (மிதமான/கரடுமுரடான அலைகள்). கூடுதலாக அல்-புரைமி மற்றும் அல்-தாஹிரா கவர்னரேட்டுகளின் பெரும் பகுதிகள் தென்கிழக்கு காற்றைக் காணக்கூடும், இதனால் பாலைவனம் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் தூசிப் புயல்கள் ஏற்படக்கூடும்.

பெரும்பாலான கவர்னரேட்டுகளில் நடுத்தர மற்றும் அதிக மேகங்கள் மேலெழும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முசந்தம் கவர்னரேட் மற்றும் அல்-ஹஜர் மலைகளின் சில பகுதிகளில் தனித்தனியாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடக்கு அல்-ஷர்கியா, தெற்கு அல்-ஷர்கியா, அல்-வுஸ்தா மற்றும் தோஃபர் கவர்னரேட்டுகளின் சில பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை குறைந்த மேகங்கள் அல்லது மூடுபனி இருக்கும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button