இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சவுதி மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் வாழத்து
சவுதி அரேபியாவின் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோர் ஆகஸ்ட் 15, வியாழன் அன்று, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளனர்.
இரு தலைவர்களும் இந்திய குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நிலையான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக வாழ்த்தினார்கள்.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 78வது சுதந்திர தினத்தை முழு உற்சாகத்துடன் கொண்டாடியது.
“தூதர் டாக்டர் சுஹெல் அஜாஸ் கான் மூவர்ணக் கொடியை விரித்து, தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார், மேலும் மாண்புமிகு ராஷ்டிரபதி ஜி தேசத்திற்கான உரையைப் படித்தார்” என்று தூதரகம் X-ல் பதிவிட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் மற்றும் பிற சமூக உறுப்பினர்களால் தேசபக்தி உணர்வு நிறைந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும் பல வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் இந்தியாவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.