சவுதி செய்திகள்

காசாவுக்கான சவுதியின் நிதி திரட்டும் பிரச்சாரம்: நன்கொடை 133 மில்லியன் டாலர்களை எட்டியது

ரியாத்
காசா மக்களுக்கு உதவி வழங்குவதற்காக சவுதி தேசிய நிதி திரட்டும் பிரச்சாரம் மூலம் இதுவரை $133 மில்லியனுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, நவம்பர் 2ம் தேதி சவுதி உதவி நிறுவனமான KSrelief நன்கொடைகளுக்காக Sahem தளத்தை தொடங்கியது. இந்த முயற்சி மூலம் இதுவரை 806,000 க்கும் அதிகமான மக்கள் நன்கொடை அளித்துள்ளனர்.

நன்கொடை அளிக்க விரும்புவோர் Apple-ன் App Store அல்லது Google Play மூலம் Sahem செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது sahem.ksrelief.org இணையதளம் வாயிலாக செலுத்தலாம். அல்லது பிரச்சாரத்தின் Al-Rajhi வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதியை வழங்கலாம்.

இதற்கிடையில், காசா மக்களுக்காக ராஜ்ஜியத்திலிருந்து உதவிகளை ஏற்றிச் செல்லும் ஏழாவது விமானம் புதன்கிழமை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அது உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதற்கான 35 டன் நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button