பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா – பிரேசில் கையெழுத்து
ரியாத்: சவுதி அரேபியா மற்றும் பிரேசில் இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரியாத்தில் கையெழுத்தானது.
சவுதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் மற்றும் பிரேசிலின் துணை ஜனாதிபதி மற்றும் அபிவிருத்தி, தொழில், வர்த்தகம் மற்றும் சேவைகள் அமைச்சர் ஜெரால்டோ அல்க்மின் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சவுதி விஷன் 2030க்கு இணங்க, இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்புத் தொழில்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உள்ளூர்மயமாக்கல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இருவரும் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களையும் மதிப்பாய்வு செய்தனர்.
சவுதி மற்றும் பிரேசில் ராணுவம் மற்றும் சிவில் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்