சவுதி செய்திகள்
ஈத் அல்அதா விடுமுறையை அறிவித்த சவுதி அரேபியா
ரியாத்: ஈத் அல்அதா 1445 AH-2024 ஐ முன்னிட்டு தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளுக்கு சவுதி மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MoHRSD) நான்கு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை கிடைக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 6, வியாழன் அன்று, சவூதி அரேபியாவின் அதிகாரிகள் பிறை நிலவைக் கண்டதை உறுதிப்படுத்தியுள்ளனர், இது ஜூன் 7 வெள்ளிக்கிழமை துல்-ஹிஜ்ஜாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
அதாவது ஹஜ் 1445 AH-2024 ஜூன் 14, வெள்ளிக்கிழமை அன்று தொடங்கும், அரஃபா நாள் ஜூன் 15 சனிக்கிழமையும், ஈத் அல் அதா ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமையும் வரும்.
#tamilgulf