அமீரக செய்திகள்
2 எமிரி ஆணைகளை வெளியிட்ட ஷார்ஜா ஆட்சியாளர்
சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான HH டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி, ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதியை நியமித்து ஒரு எமிரி ஆணையை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜூன் 1, 2024 முதல் ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சியை நியமித்துள்ளதாக இந்த ஆணை குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஷார்ஜா காவல்துறையின் துணைத் தலைமைத் தளபதி பதவி உயர்வு மற்றும் நியமனம் தொடர்பான எமிரி ஆணையையும் வெளியிட்டுள்ளார்.
அதில், கர்னல் அப்துல்லா முபாரக் பின் அமர், பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்டு, ஷார்ஜா காவல்துறையின் துணைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவார், ஜூன் 1, 2024 முதல் இது அமலுக்கு வந்தது என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#tamilgulf