ஃபக் குர்பா முயற்சியின் ஒரு பகுதியாக 1,200 கைதிகள் விடுவிப்பு
மஸ்கட்: ‘ஃபக் குர்பா (Fak Kurbah)’ முயற்சியானது அதன் பதினொன்றாவது பதிப்பில் 1,200க்கும் மேற்பட்ட கடன்பட்டவர்களை விடுவித்துள்ளது.
“ஃபக் குர்பா” முயற்சியை மேற்பார்வையிடும் ஓமானி வழக்கறிஞர்கள் சங்கம், முயற்சியின் பதினொன்றாவது பதிப்பில் வெளியிடப்பட்ட மனிதாபிமான வழக்குகளின் எண்ணிக்கை 1,219 வழக்குகளை எட்டியுள்ளதாக கூறியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டாளர்களின் பரந்த பங்கேற்பால் வகைப்படுத்தப்பட்டு, இந்த முயற்சியை ஒரு புதிய சாதனைக்கு கொண்டு வருவதாக டாக்டர் ஹமத் அல் ரூபாய் கூறினார்.
2012 ல் இந்த முயற்சி தொடங்கப்பட்டதில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது வரை தோராயமாக 7,100 வழக்குகளை எட்டியுள்ளது.
“ஃபக் குர்பா” முன்முயற்சியின் பொது மேற்பார்வையாளர் டாக்டர். முகமது பின் இப்ராஹிம் அல் ஜட்ஜாலி கூருகையில், “ஃபக் குர்பா முன்முயற்சி ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தொடங்கப்படும் ஒரு தன்னார்வ முன்முயற்சியாகும். இது ஓமானியில் உள்ள வழக்கறிஞர்கள் குழுவால் ஏற்பாடு செய்யப்படுகிறது.