படித்ததில் பிடித்தது

ராஜராஜ சோழன் காட்டிய வழி: வைரக் கடத்தலை முறியடித்த ஒரு சிறுமியின் ஓவியம்!

அரசன் அன்று கொல்வான்: வைரக் கடத்தலை அம்பலப்படுத்திய ராஜராஜ சோழனின் ஓவியம்!

அந்த அழகிய தோட்டத்தில் அமர்ந்து கணவருடன் பீங்கான் கோப்பையில் தேநீரை ருசித்து குடித்துக் கொண்டிருந்த தேன்மொழிக்கு ,
“அம்மா! சீக்கிரம் உள்ளே வாம்மா!” என விடாமல் வீட்டுக்குள் இருந்து அழைத்த மகள் வேதாவின் குரல் மிகவும் தொந்தரவாக இருந்தது

“ஏய்! என்ன ஆச்சு உன் மகளுக்கு? என் கூட கொஞ்ச நேரம் கூட உன்னை பேச விடமாட்டேங்கிறாளே? ”
என்று சலித்துக் கொண்டார் அப்பா ஞானசேகர்

“அவ பள்ளியில் கண்காட்சி ஒன்று வைக்க போறாங்களாம். அதுக்கு தான் உங்க பொண்ணு இந்த ஆட்டம் ஆடுற.. இந்தப் பிள்ளைங்களை ஸ்கூல்ல ஏதாவது செய்ய சொல்லிட்டாங்கனா போச்சு.நம்மள பாடாபடுத்தி வெச்சிடுதுங்க. இப்ப ஸ்கூல்ல ஐந்தாம் வகுப்பு படிக்கிறது அவளா? இல்லை நானா? என்று எனக்கே சந்தேகம் வந்திடுச்சு. சரி வரேன். நீங்க நம்ம கடைக்கு கிளம்புங்க” என்று கணவனிடம் புலம்பிக்கொண்டே உள்ளே சென்ற தேன்மொழி மகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள் .

வேதா வைத்திருந்த அந்த வெள்ளை அட்டையில் பென்சில் கொண்டு அழகாய் ஓவியம் தீட்ட ஆரம்பித்தாள் அம்மா தேன்மொழி

சோழ அரண்மனையில் இருந்து ராஜா ராணி வருவது போல் 3D படம் வரைந்து அதில் தனது கலைத் திறனை முழுவதுமாக காட்ட ஆரம்பித்தாள் அவள்

சோழ ராஜ்யத்தை தன் கை வண்ணத்தால் அவள் வரைந்த அந்த ஓவியத்தை ஒருவேளை அன்றைய அரசர் ராஜராஜ சோழன் மட்டும் பார்த்திருந்தால் போதும் ,தேன்மொழிக்கு தங்க காசு மூட்டையை பரிசாக தந்திருப்பார் .. அவளது கற்பனையில் உருவான அந்த வரைபடத்தை பார்க்கும் பொழுது இப்படிதான் மன்னர் ராஜராஜ சோழனும், அவரது மனைவி வானதி எனும் வானமாதேவியும் இருந்திருப்பார்களோ என நம்ப தோன்றும். அத்தனை தத்ரூபமான கலை வடிவம்

அடுத்து அவர்களுக்கு நகை அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள் தேன்மொழி. மன்னரின் மகுடத்திற்கு கலை வேலைப்பாடு செய்யும் முன் அவரை ஒரு முறை உற்று நோக்கினாள். அவள் கண் முன்னே தஞ்சை பெரிய கோவில் வந்து மறைந்தது
தேன் மொழியின் கற்பனையை கலைப்பது போல் மன்னரின் ஆபரணங்களுக்கு ஒட்டுவதற்காக ,தான் சேர்த்தும், வாங்கியும் வைத்திருந்த முத்து, மணி, கற்களை ஒரு பிளாஸ்டிக் தட்டில் கொட்டி அம்மாவிடம் நீட்டினாள் வேதா..

மன்னரின் மகுடம் ஒட்டும் பசையின் உதவியால் கற்கள் ஒட்ட ஒட்ட அழகாய் காட்சி தர ஆரம்பித்தது ஆனால் சில கற்கள் மட்டும் அந்த மகுடத்தில் ஒட்டிக் கொள்ள மறுத்தன. அவை வித்தியாசமான அழகிய கற்கள்..
“என்னாச்சும்மா? என்றாள் மகள்.”
சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் . இதில் சில கற்களை மட்டும் ஏற்க மறுக்கிறார் .அட்டையில் ஒட்ட மாட்டேங்குது.மன்னர் இதை வேண்டாம் என்கிறாரடி” என தேன்மொழி விளையாட்டாக சொல்லியபடி அவள் கையில் வைத்திருந்த கல்லை மீண்டும் பார்க்க, திக்கென்றது அவளுக்கு.
அதன் அபரீதமான மினுமினுப்பில் அவளது கண்கள் கூசியது..
அவசரமாக தனது கணவனை அழைத்தாள் அவள்.
அந்தக் கற்களைக் கண்ட கணவன் ஞானசேகரோ திடுக்கிட்டார்..

“ஐயோ! இது என்ன விபரீதம்!இவை வைரக்கல் போல் தெரிகிறதே! “என்று பதறினார் அந்த சிறு நகைக் கடை வியாபாரி ஞானசேகர்.. அவர் கண்ணில் பட்ட ஐந்து வைர கற்களையும் தனியே பிரித்து எடுத்தார் ஞானசேகர்

அடுத்து மகளின் கன்னத்தில் விழுந்தது பலத்த அடி.
“ஏதுடி.. உனக்கு இது? அப்பாவோட பீரோவில் நகை செய்ய வைத்திருந்த ஏதேனும் கற்களை தெரியாம எடுத்துட்டியா? அப்படியே இருந்தாலும் அவரிடம் வைர கற்கள் எப்படி? என்றும் புரியாமல் தலை சுற்றுகிறது.. உண்மையை சொல்லு..இது வைரம்டி” என தேன்மொழி கத்த மனைவியை சமாதானப்படுத்தினார் ஞானசேகர் .

“இந்த வைர கற்கள் அபூர்வமானது.இதுபோன்ற வைரம் கிடைப்பதற்கு மிகவும் அரிதானது. இது எப்படி நம் வேதாவிடம் ?” என்று கேட்டு விட்டு அரண்டு போன குழந்தையை சமாதானப்படுத்தியபடி, மகளிடம் அந்தக் கற்கள் கிடைத்த விவரம் கேட்டறிந்தார் ஞானசேகர்..

புதிதாக தன் பள்ளியில் சேர்ந்திருந்த தோழி ரியா தனக்கு தந்ததாக சொன்ன மகள் வேதாவை நம்பி அன்றே அவற்றை எடுத்துக் கொண்டு மகளுடன் ரியா இல்லம் தேடி சென்றார் அப்பா ஞானசேகர்

அது இந்தியாவின் பெரும் புள்ளியான வைர வியாபாரி சரத்சந்தரின் இல்லம்.
பல இடையூறுகளுக்கு இடையே அந்த வீட்டின் உள்ளே அனுமதிக்கப்பட்டார் ஞானசேகர்.

ரியாவின் தந்தை முன்பு மேசையின் மேல் கொட்டப்பட்டது ஞானசேகர் கொண்டு வந்திருந்த ஐந்து வைர கற்களும்.. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் வைர வியாபாரி சரத்சந்தர். விவரம் அறிந்த அவர் தனது
மகளை விசாரித்தார் சரத்தின் மகளோ”அப்பா !நீங்கள் இது போன்ற கற்களை நம் வீட்டு சாமி சிலைகளுக்கு கீழே உள்ள பீடத்தில் வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு என் பள்ளியில் ஒரு கிராப்ட் வேலை செய்வதற்கு எனக்கு கற்கள் தேவைப்பட்டதால் அதை எடுத்துக் கொண்டேன் . நான்தான் அதில் கொஞ்சம் வேதாவிற்கும் தந்தேன்” ‘என்று ஒளிவு மறைவில்லாமல் சொன்னாள் வைரத்தின் மதிப்பு தெரியாத ரியா.

மகள் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த சரத் சந்தர் சட்டென ஞானசேகரை பார்த்து, இது என் மகளின் தவறு தான். ஒத்துக் கொள்கிறேன் அதற்காக ஐந்து கற்களை மட்டும் திரும்ப கொடுத்தால் போதுமா? மீதமுள்ள கற்கள் எங்கே? அதையும் கொடுத்துவிட்டு இங்கிருந்து நகருங்கள், இவை மற்ற கடைகளில் இருப்பது போன்ற சாதாரண வைரம் அல்ல நம் நாட்டில் கிடைக்காத அரிதான வைரம். இதை வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு கொண்டு வர எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியும்மா?உண்மையை சொன்னதற்கு நன்றி.ஆனால் நீங்கள் மறைத்து வைத்திருக்கும் மீதி கற்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்.இல்லையென்றால் உங்கள் உயிருக்கு இனி உத்தரவாதம் இல்லை “என்று மிரட்டியே கத்தினார் சரத்சந்தர்

“அடடா! தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்த்த கதையால இது இருக்கு.” என்று சொல்லிய ஞானசேகர் பின் “என்ன கொலை மிரட்டலா?உங்களைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு தான் வந்திருக்கிறேன். இன்னும் சில மணி நேரங்களில் சுங்கத் துறை அதிகாரிகள் உங்களை தேடி வருவார்கள்”என வாய்விட்டு சிரித்தார் ஞானசேகர் .
சட்டென சரத்சந்தரின் கோபம் மகள் ரியாவின் பக்கம் திரும்பியது . “என்னை இப்படி காட்டிக் கொடுத்து விட்டாயே!“என கோபமாக கத்தி மகளை ஓங்கி அடித்து தரையில் போட்டு புரட்டிய சரத்சந்தரின் கையை வேகமாக பிடித்தார் ஞானசேகர்.

வைர கடத்தலில் ஈடுபட்டுள்ள நீ இன்று வசமாக மாட்டப் போகிறாய் என்பது உறுதியாகி விட்டது. அதுவும் ஆதாரத்துடன்.. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு தானே ஆக வேண்டும். “என்று சொல்ல .,

இங்கே பாரடா!என்னை காட்டிக் கொடுக்க நினைத்தவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விடமாட்டேன்.” என்று சரத் உச்சத்தில் கத்த,
“ ஓ! அப்படியானால் நீங்கள் 1000 வருடங்களுக்கு பின் சென்று தான் அவருடன் மோத வேண்டும்.. நீங்கள் நினைப்பது போல் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது நான் அல்ல.. உன்னை காட்டிக் கொடுத்தது உன் ஆசை மகளும் அல்ல.. உண்மையில் அது அந்த மன்னர் ராஜ ராஜ சோழனே தான். “
அரசன் அன்று கொல்வான் ,தெய்வம் நின்று கொல்லும்” என்று சும்மாவா சொன்னார்கள் அந்த காலத்தில்” என சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஞானசேகர். அந்த வடமொழிகாரரோ ஒன்றும் புரியாமல் விழித்தார்
🌹🌹 இனிய காலை வணக்கம் 🌹🌹

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button