
ஒரு நாயின் கதை… மனிதர்களுக்கான பாடம்
அது ஒரு உல்லாசக் கப்பல்.
சொகுசின் உச்சம்.
ஆங்கிலத்தில் Cruise என்று அழைப்பார்கள்.
பெரும் பணக்காரர்கள், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள்,
பிஸ்னஸ் மேக்னெட்டுகள்—
ரிலாக்ஸாக கடலில் சுத்தி வர
குடும்பம், நண்பர்கள், காதலர்கள் என்று
ஜாலியாக பயணம் போக ஏற்ற
அதிக வசதிகள் கொண்ட ஆடம்பரக் கப்பல்.
ஒரு முறை,
ஒரு இந்திய அரசியல்வாதி
அந்த கப்பலை சில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து
தன் குடும்பம், பரிவாரங்கள், ஜால்ராக்களுடன்
சந்தோஷமாக பயணம் செய்ய முடிவு செய்தார்.
அந்த பரிவாரங்களில்
மிக முக்கியமான ஒருவர் இருந்தார்…
அவரின் செல்ல நாய் – “டாமி.”
பயணம் தொடங்கியதும்
என்ன காரணமோ தெரியவில்லை…
டாமிக்கு அந்த கப்பல் பிடிக்கவில்லை.
நாய் தானே…
விடாமல் குரைத்தது.
யாரைப் பார்த்தாலும் சீறியது.
அங்கும் இங்கும் ஓடி
கண்ட இடமெல்லாம் உச்சாவும், கக்காவும்.
கப்பலில் இருந்த
Veterinary Doctor-க்கும்
நாயின் இந்த மாற்றத்திற்கு
காரணம் புரியவில்லை.
பயணத்தின் சந்தோஷம் கெட்டுப்போனது.
அரசியல்வாதி அப்செட்.
ஜால்ராக்கள் இன்னும் அப்செட்.
அந்த கப்பலில்
ஒரு ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி
Radio Officer ஆக பணியில் இருந்தார்.
அவர் அமைதியாக
நாயின் சேட்டைகளை கவனித்தார்.
பின் சொன்னார்:
“அரை மணி நேரம் அந்த நாயை
என்கிட்ட ஒப்படைத்தால் போதும்…
ஆட்டுக்குட்டி மாதிரி மாற்றிடுவேன்.”
இந்த வார்த்தை
ஒரு ஜால்ராவின் காதில் விழுந்தது.
அங்கிருந்து
அரசியல்வாதியின் காதுக்குப் போய் சேர்ந்தது.
உறுமியபடி அரசியல்வாதி கேட்டார்:
“என்னய்யா…
என் டாமியைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?
அவன் சாப்பிடும் உணவின் விலை
உன் சம்பளத்தைவிட அதிகம்!
என்ன நினைச்சுக்கிட்டு பேசுற?”
கமாண்டர் அமைதியாகச் சொன்னார்:
“நாயின் நன்மைக்காகத்தான் சார்.”
“அப்படியா?
சரி… இதோ டாமி.
பார்ப்போம்!”
என்று சவால் விட்டார் அரசியல்வாதி.
கமாண்டர் நிபந்தனை வைத்தார்:
“அரை மணி நேரம்
யாரும் குறுக்கே வரக்கூடாது.
நாயின் பாதுகாப்பு என் பொறுப்பு.”
அனுமதி கிடைத்தது.
அடுத்த நிமிடம்—
நாயின் உடலில்
ஒரு Floater கட்டி,
நாற்பது அடி கயிற்றுடன்
கடல் நீரில் தூக்கி எறிந்தார்.
அரசியல்வாதியும்
ஜால்ராக்களும்
அதிர்ச்சியில் உறைந்தனர்.
“முப்பது நிமிடம் அமைதியாக இருங்கள்.”
“நாய்க்கு ஒன்றும் ஆகாது.”
நாய் நீரில்
பதறி, ஊளையிட்டு
உயிரைக் காப்பாற்ற
நீச்சலடித்தது.
29-வது நிமிடம்…
நாயை மீண்டும் கப்பலுக்குள் இழுத்து
துடைத்தார்கள்.
சொகுசு மெத்தையில் படுக்க வைத்தார்கள்.
சூப்பும், விருப்பமான உணவும் கொடுத்தார்கள்.
நாய்
வாலாட்டிக்கொண்டு சாப்பிட்டது.
பின் அமைதியாக வந்து
அரசியல்வாதியை நக்கியது.
ஒரே ஆச்சரியம்.
“என்ன மாயம் இது?”
“இவ்வளவு நேரம் வெறித்தனமாக இருந்த நாய்
இப்போ ஆட்டுக்குட்டி மாதிரி இருக்கே!”
கமாண்டர் சொன்னார்:
“ஒண்ணுமில்லை சார்…
தண்ணீரில் போட்டவுடன்தான்
நாய்க்கு தெரிஞ்சது—
உயிருக்கு உண்மையான ஆபத்து எது…
கப்பல் எவ்வளவு பாதுகாப்பானது என்று.”
அரசியல்வாதி சிரித்தார்:
“நாயின் சைக்காலஜி நல்லா தெரிஞ்சிருக்கே!”
கமாண்டர் அமைதியாக பதில் சொன்னார்:
“இது நாயின் சைக்காலஜி இல்லை சார்…
மனுஷன் சைக்காலஜியும் அதேதான்.”
பின் அவர் சொன்ன வார்த்தைகள்—
“இந்தியாவுல
யாரோ போடுற எலும்புத் துண்டுக்காக
போராட்டம், ஆர்ப்பாட்டம் பேருல
பொது சொத்துகளை நாசம் செய்யுற
ஆயிரம் ரெண்டாயிரம் பேரை மட்டும்
ஒரு பத்து இருபது விமானங்களில் ஏற்றி
வடகொரியா, பாகிஸ்தான்,
சிரியா, ஈராக்,
ஆஃப்கானிஸ்தான், சோமாலியா
மாதிரி நாடுகளில்
ஆறு மாதம் விட்டுட்டு வாங்கினா…
பாரத தேசம்
எத்தனை பெரிய புண்ணிய பூமி
ன்னு
அந்த இரண்டு கால ஜென்மங்களுக்கும் புரியும்.”
“Good day sir…
Have a nice journey.”
அவர் தனது பணியிடத்தை நோக்கி
அமைதியாக நடந்து சென்றார்.
அந்த தருணம்…
அரசியல்வாதி
யோசிக்கத் தொடங்கினார்.
அசிங்கமா…
அங்கே
ஜால்ராக்களின் சத்தமும்
கேட்கவில்லை.



