துபாய் மற்றும் ஸ்கார்டு இடையே விமானத்தை மீண்டும் தொடங்குவதாக அறிவித்த PIA!
பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) துபாய் மற்றும் ஸ்கார்டு இடையே தனது பருவகால விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 29 முதல் நடைமுறைக்கு வருகிறது.
விமானம் முதன் முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று தொடங்கப்பட்டது, ஆனால் குளிர்காலத்தில் ஸ்கார்டுவில் கடுமையான வானிலை காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது.
“PIA ஏப்ரல் 19 முதல் துபாய்-சகார்டு வழித்தடத்தில் பருவகால நேரடி விமான சேவையை மறுதொடக்கம் செய்கிறது” என்று துபாயில் உள்ள PIA ன் பிராந்திய மேலாளர் ஜீஷன் அகமது தெரிவித்தார்.
ஏப்ரல் 29 ஆம் தேதி ஸ்கார்டு -துபாய் விமானத்துடன் விமான செயல்பாடு மீண்டும் தொடங்கும், துபாய்-ஸ்கார்டு விமானம் மே 3 ஆம் தேதி இயக்கப்படும். “குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துபாயில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை விமானத்தை அனுபவிக்க முடியும்” என்று அவர் கூறினார்.