இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் வானிலை இருக்கும்; இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை ஈரப்பதமாக இருக்கும்

UAE Today Weather:
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) இன்று நிலவும் வானிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் வானிலை இருக்கும். சில கடலோர மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்த மேகங்கள் தோன்றும், அதன் காரணமாக நாட்டில் வெப்பநிலை குறையும்.
சில உள் மற்றும் வடக்குப் பகுதிகளில் மூடுபனி உருவாகும். அதனால் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை ஈரப்பதமாக இருக்கும். லேசானது முதல் மிதமான காற்று மேற்கு நோக்கி வீசும், குறிப்பாக கடலுக்கு மேல் காற்று வீசும்.
அபுதாபியில் 23°C ஆகவும், துபாயில் 24°C ஆகவும் வெப்பநிலை இருக்கும். எமிரேட்ஸில் அதிகபட்சமாக வெப்பநிலை 28°C முதல் 29°C வரை பதிவாகும்.
அரேபிய வளைகுடாவில் கடல் சிறிது முதல் மிதமாகவும், சில சமயங்களில் கொந்தளிப்பாகவும் இருக்கும், ஓமன் கடலில் அலைகள் சிறிது சிறிதாக இருக்கும்.