ராஸ் அல் கைமா முதல் கோழிக்கோடு வரை முதல் இடைநில்லா விமானம்- ஏர் அரேபியா அறிவிப்பு

Ras al Khaimah: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் அரேபியா, இந்தியாவின் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதிக்கு ராஸ் அல் கைமாவிலிருந்து தனது முதல் இடைநில்லா விமானத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில், G9 728 ராஸ் அல் கைமாவில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு கோழிக்கோடு வந்தடையும். பின்னர் கோழிக்கோட்டில் இருந்து இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு ராஸ் அல் கைமாவை வந்தடையும்.
நவம்பர் 22 ஆம் தேதி முதல் விமானம் ராஸ் அல் கைமாவில் இருந்து புறப்பட்டது. இந்த நிகழ்விற்கு முன்னதாக, RAK சர்வதேச விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட தொடக்க விழா நடந்தது.
விழாவில் ஷேக் சலேம் பின் சுல்தான் அல் காசிமி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் தலைவர், ராஸ் அல் கைமா; சதீஷ் குமார் சிவன், துபாய் மற்றும் வடக்குப் பகுதிகளுக்கான இந்தியத் தூதரக தலைவர்; அடெல் அல் அலி, ஏர் அரேபியாவின் குழுமத்தின் தலைமை நிர்வாகி; வர்த்தக பங்காளிகள் மற்றும் பிற விருந்தினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதிய நேரடி விமானம் ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வரை வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கும்.