அமீரக செய்திகள்

இணைய சட்டங்களை மீறியதற்காக 1,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத வலைத்தளங்கள் முடக்கம்

பல்வேறு ஊடக நெட்வொர்க்குகளுக்கு சொந்தமான பொழுது போக்கு உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்புவதன் மூலம் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் 1,000 இணையதளங்களை ஐக்கிய அரபு எமிரேட் இந்த ஆண்டு முடக்கியுள்ளது என்று பொருளாதார அமைச்சகம் (MoE) தெரிவித்துள்ளது.

மல்டிமீடியா உள்ளடக்கத்திற்கு அதிக தேவை இருந்த ரமலானில் பெரும்பாலான சட்டவிரோத வலைத்தளங்கள் தடுக்கப்பட்டன என்று பொருளாதார அமைச்சகத்தின் அறிவுசார் சொத்து உரிமைகள் துறையின் உதவி துணைச் செயலாளர் டாக்டர் அப்துல்ரஹ்மான் ஹசன் அல் முயைனி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “புனித மாதத்தில் ‘InstaBlock’ முன்முயற்சியை செயல்படுத்தியதில் இருந்து, பல்வேறு ஊடக நெட்வொர்க்குகளுக்கு சொந்தமான பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்புவதன் மூலம் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய மொத்தம் 1,117 இணையதளங்களை நாங்கள் தடுத்துள்ளோம்.”

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைத்தளங்களின் எண்ணிக்கை 2023 உடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது.

“நேரடி ஆன்லைன் ஒளிபரப்பில் பதிப்புரிமை மீறல்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கான சிறப்பு உடனடி பதில் சேவையை வழங்கும் விரிவான அணுகுமுறையை நாங்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம் என்பதை இது நிரூபிக்கிறது” இந்த ‘InstaBlock’ முன்முயற்சி ஆண்டு முழுவதும் இருக்கும் என்று அல் முயைனி கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button