ஓமன் செய்திகள்
ஓமானின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்

மஸ்கட் : ஓமன் வானிலை ஆய்வு மையம், அல் தகிலியா, மஸ்கட், வடக்கு அல் ஷர்கியா, தெற்கு அல் ஷர்கியா மற்றும் அல் தாஹிரா ஆகிய மாகாணங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் பொது இயக்குநரகம் வெளியிட்ட கடைசி புதுப்பிப்பின்படி, வடக்கு நோக்கி மேகங்கள் தொடர்ந்து பாய்கின்றன.
மேலும் தெற்கு அல் பதி3னா, வடக்கு அல் பதினா, மஸ்கட், அல் தாஹிரா, அல் தகிலியா மற்றும் வடக்கு அல் ஷர்கியா, தெற்கு அல் ஷர்கியா, அல் வுஸ்தா ஆகிய சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது மற்றும் தோஃபர் கவர்னரேட்டுகளின் சில பகுதிகளில் குறைந்த மேகங்கள் உருவாகியது.
#tamilgulf