ஷார்ஜாவில் பெரும் தீ விபத்து: அடர்ந்த புகை மூட்டம் வெளியேறுவதாக தெரிவித்த குடியிருப்பாளர்கள்

ஷார்ஜாவின் தொழில்துறை பகுதிகள் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
“நான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது ஜன்னலில் இருந்து வானத்தில் புகை அதிகமாகக் காணப்பட்டது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க நான் விரைந்தேன். நாங்கள் துபாய்-ஷார்ஜா எல்லைக்கு அருகில் வசிப்பதால் இது ஷார்ஜாவிலிருந்து வருவது போல் தெரிகிறது,” என்று தஸ்மியா அன்வர் கூறினார்.
மதியம் 2.30 மணியளவில் ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு ஓட்டிச் செல்லும் மற்றொரு குடியிருப்பாளரான ஜார்ஜ் எம், தொழில் துறை பகுதியில் இருந்து அடர்ந்த புகை வருவது போல் தெரிகிறது என்றும் தூரத்தில் இருந்து பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அபு ஹைலில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளரான அஃப்ஷா நூரி தனது குடியிருப்பின் ஜன்னலில் இருந்து புகையைக் கண்டார். “நான் மம்சார் கடற்கரைக்கு அருகில் வசிக்கிறேன், மதியம் 2.30 மணியளவில் நான் வெளியே புகையைக் கண்டேன். அது மம்சார் பகுதி மற்றும் ஷார்ஜாவின் திசையில் இருந்து வருகிறது” என்று கூறினார்.