வித்தைக்காரன்: சதீஸ் நடிக்கும் புதிய படம்

லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகில் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். இவர் தனது முதல் படமான மாநகரத்தில் இருந்து அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ளார். அவரது இரண்டாவது படம் கார்த்தியுடன் கைதி, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வித்தைக்காரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.