KSrelief- UNDP இணைந்து ஏமனில் தொழில் மற்றும் வணிக திறன் பயிற்சியின் 2-ம் கட்டத்தை தொடங்கியது!

ரியாத்
கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) இணைந்து ஏமனில் தொழில் மற்றும் வணிகத் திறன் பயிற்சி மற்றும் ஆதரவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஒன்பது ஏமன் கவர்னரேட்டுகளில் உள்ள 24 இயக்குநரகங்களைச் சேர்ந்த 1,500 இளைஞர்களுக்கு தொழில், தொழில்நுட்பம் மற்றும் வணிகத் திறன்களில் பயிற்சி அளிப்பது இந்தத் திட்டத்தில் அடங்கும்.
KSrelief, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) இணைந்து ஏமனில் தொழில் மற்றும் வணிகத் திறன் பயிற்சி மற்றும் ஆதரவுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் உணவு உற்பத்தி, ஜவுளி, கை நெசவு, படகு இயந்திரம் பழுதுபார்த்தல், சூரிய ஆற்றல் அமைப்பு பராமரிப்பு மற்றும் நிறுவுதல் ஆகியவற்றில் திறன்கள், பயிற்சி முடித்த பிறகு பயனாளிகள் தங்கள் சொந்த தொழில்களை நிறுவ உதவும் தொழில் கருவிகள் ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில், KSrelief 664 டன்களுக்கும் அதிகமான உணவு உதவிகளை ஏமன் மாரிப் மாகாணத்தில் உள்ள 43,449 பேருக்கு விநியோகித்தது, பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 166 டன்களுக்கும் அதிகமாக உணவு உதவிகளை செய்துள்ளது. இதன் மூலம் 12,250 பேர் பயனடைந்தனர்.