சவுதி செய்திகள்
காசாவிற்கு ஆதரவாக WHO உடன் $10m ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட KSrelief

சவுதி அரேபியாவின் உதவி நிறுவனமான KSrelief செவ்வாயன்று 10 மில்லியன் டாலர் மதிப்பில் காசா பகுதியில் அவசர சிகிச்சை சேவைகளை ஆதரிப்பதற்காக ஐநாவின் உலக சுகாதார நிறுவனத்துடன் கையொப்பமிட்டுள்ளது.
456,000 தனிநபர்களுக்கு பயனளிக்கும் 40 சுகாதார வசதிகளுக்கு மருத்துவ பொருட்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவது மற்றும் விரிவுபடுத்துவது இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
KSrelief -ன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கான உதவி ஜெனரல்-மேற்பார்வையாளர் அஹ்மத் அல்-பைஸ் மற்றும் WHO-ன் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹனன் பால்கி ஆகியோர் வீடியோ அழைப்பின் போது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
#tamilgulf