ஐநா வளர்ச்சித் திட்டத்தின் ஒத்துழைப்புடன் KSrelief உணவு உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது!

ரியாத்
சவுதி அரேபிய உதவி நிறுவனமான KSrelief ஏமனின் மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு ஒரு பெரிய உணவு உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மையம், ஐநா வளர்ச்சித் திட்டத்தின் ஒத்துழைப்புடன், ஏடன், அபியான், லாஜ், தலேயா மற்றும் தைஸ் ஆகிய பகுதிகளில் உள்ள 170,487 பேருக்கு 119,394 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கிறது.
ஏமனின் சமூக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சலேஹ் மஹ்மூத், ஏமன் மக்களுக்கு ஆதரவை வழங்குவதில் சவுதி அரேபியாவின் பங்கின் முக்கியத்துவத்தையும், “தற்போதைய கடினமான சூழ்நிலையில் இலக்கு வைக்கப்பட்ட குடும்பங்களின் துன்பத்தைப் போக்குவதற்கான திட்டத்தின் முக்கியத்துவத்தையும்” குறிப்பிட்டார்.
நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
திட்டத்தின் உதவி இயக்குனர் சுஹைப் ஜோபன், கூட்டாளர்களுடனான ஒருங்கிணைப்பின் மூலம் இந்த முயற்சி விரைவாக வந்ததாக கூறினார்.