சவுதி செய்திகள்

சூடானில் 1,900 உணவுப் பொட்டலங்களை விநியோகித்த KSrelief!

சவுதி அரேபியாவின் உதவி நிறுவனமான KSrelief புதன்கிழமை சூடானில் 1,900 உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது.

வெள்ளை நைல் மாநிலத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 1,160 உணவுப் பொட்டலங்களை இந்த அமைப்பு வழங்கியது, 6,670 பேர் பயனடைந்துள்ளனர். சென்னார் மாநிலத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 689 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது, 3,858 பேர் பயனடைந்தனர்.

KSrelief-ன் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கான உதவி மேற்பார்வையாளர் ஜெனரல் Aqeel bin Jamaan Al-Ghamdi மற்றும் Horn of Africa க்கான சுவிட்சர்லாந்தின் சிறப்புத் தூதுவர் Sylvain Astier ஆகியோருக்கு இடையே புதன்கிழமை ரியாத்தில் நடந்த கூட்டத்தில் ராஜ்யத்தின் உதவிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

உலகெங்கிலும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ KSrelief-ன் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஆஸ்டியர் பாராட்டினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button