அமீரக செய்திகள்

17,000 திர்ஹம்களுக்கு மேல் தள்ளுபடியுடன் புதிய நோல் கார்டு அறிமுகம்

சுற்றுலாப் பயணிகள், குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்காக பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் 17,000 திர்ஹம் வரை தள்ளுபடியுடன் கூடிய புதிய நோல் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, நோல் பயண அட்டையை வைத்திருப்பவர்கள் துபாயில் பொது போக்குவரத்து, பார்க்கிங் மற்றும் பிற பொழுதுபோக்கு அனுபவங்களுக்கு பணம் செலுத்த பயன்படுத்தலாம்.

புதிய அட்டையானது ஹோட்டல்கள், கடைகள், சாகசங்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நகரத்தில் உள்ள பிற சலுகைளுக்கு ஐந்து முதல் 10 சதவீதம் வரையிலான தள்ளுபடியை வழங்குகிறது.

ஆரம்ப கட்டங்களில், நோல் பயண அட்டை துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் (DXB) Zoom மற்றும் Europcard போன்ற சில பார்ட்னர் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

தொடக்கத்தில் ஒரு வருடத்திற்கு Dh200 விலையில் 19 Dh இருப்புடன், ஆண்டின் இறுதியில் Dh150 க்கு கார்டைப் புதுப்பிக்கலாம்.

இருப்பினும், தற்போதுள்ள நோல் கார்டு பயனர்கள் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நோல் டிராவல் கார்டுக்கு மாற முடியாது, ஆனால் எதிர்காலத்தில் அதை பரிசீலிப்பதாக RTS தெரிவித்துள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button