சவுதி செய்திகள்

சவுதி அரேபியாவில் கார் மீது பள்ளி பேருந்து மோதியதில் 4 மாணவிகள் உயிரிழந்தனர்

Saudi Arabia(தம்மாம்)
சவுதி அரேபியாவில் பள்ளி பேருந்தும் காரும் மோதியதில் நான்கு மாணவிகள் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். ஜுபைல் இண்டஸ்ட்ரியல் சிட்டி, அல்மட்ராஃபியா மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற பள்ளிப் பேருந்தும், காரும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் சகோதரருடன் காரில் பயணித்த மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் பஸ் டிரைவர் படுகாயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button