ஹஜ் 2024: யாத்ரீகர்களின் இறப்பு எண்ணிக்கை 1,300ஐத் தாண்டியது
சவுதி அரேபியா மற்றும் புனித நகரமான மக்கா முழுவதும் கடுமையான வெப்பம் வீசியதால், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் 1,300 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
சவுதியின் சுகாதார அமைச்சர் ஃபஹத் அல் ஜலாஜெல் இதற்கு முன்னர் மொத்தம் 1,301 இறப்புகளை உறுதிப்படுத்தினார். யாத்ரீகர்கள் “நேரடி சூரிய ஒளியில் போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நீண்ட தூரம் நடந்து செல்வதால்” உயிரிழப்பு ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக அவர் மேலும் கூறினார்.
இறந்தவர்களில் 83 சதவீதம் பேர் வருடாந்திர புனித யாத்திரை செய்ய அங்கீகரிக்கப்படாதவர்களில் அடங்குவர் என்று அமைச்சர் கூறினார்.
கடந்த சில நாட்களில், குறைந்தது எட்டு நாடுகளின் அதிகாரிகள் தங்கள் யாத்ரீகர்களிடையே இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர்:
– எகிப்து: 672
– இந்தோனேசியா: 236
– ஜோர்டான்: 99
– துனிசியா: 49
– இந்தியா: 98
மற்ற நாடுகளான ஈரான் , செனகல் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன.