குவைத் எமிர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா காலமானார்

Kuwait:
குவைத் எமிர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா காலமானதாக எமிரி நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
“மிகுந்த சோகத்துடனும் துக்கத்துடனும், நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்” என்று குவைத் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கை ஒன்று கூறியது.
அரசு தொலைக்காட்சி தனது வழக்கமான நிகழ்ச்சிகளை குறைத்து, அறிவிப்புக்கு முன்பே குர்ஆன் ஓதுதலை ஒளிபரப்பியது.
நவம்பரில், ஷேக் நவாஃப் “அவசர உடல்நலப் பிரச்சனை காரணமாக”, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறியது. ஆனால் செய்தி நிறுவனம் அவரது நோயைப் பற்றி விவரிக்கவில்லை. பின்னர் அவர் நிலையான நிலையில் இருப்பதாக அறிவித்தது.
குவைத் மாநிலத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 40 நாட்களுக்கு உத்தியோகபூர்வ துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், அரசு துறைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் நவாஃப் 2020 ஆம் ஆண்டு தனது முன்னோடியான மறைந்த ஷேக் சபா அல் அகமது அல் சபாவின் மரணத்தைத் தொடர்ந்து அமீராக பதவியேற்றார்.
1937-ல் பிறந்த ஷேக் நவாஃப், 1921 முதல் 1950 வரை குவைத்தின் மறைந்த ஆட்சியாளரான ஷேக் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் ஐந்தாவது மகனாவார்.
அவர் தனது 25 வயதில் ஹவாலி மாகாணத்தின் ஆளுநராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் உள்துறை அமைச்சராக 1978 வரை இருந்தார்.