அமீரக செய்திகள்
துபாய்: Dh7.32 மில்லியனுக்கு விற்கப்பட்ட வாகனத் தகடு எண் AA16
துபாயில் நடந்த பிரீமியம் வாகன எண் தகடுகளின் 115 வது திறந்த ஏலத்தில், ப்ளேட் எண் AA16 7.32 மில்லியன் திர்ஹம்ஸைப் பெற்றதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
RTA ன் அறிக்கையின்படி, 90 நம்பர் பிளேட்டுகளின் ஏலத்தின் மூலம் மொத்தம் Dh65.588 மில்லியன் திரட்டப்பட்டது, இது முந்தைய ஏலத்தின் Dh 51.216 மில்லியன் உடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹில்டன் துபாய் அல் ஹப்தூர் சிட்டியில் நடைபெற்ற ஏலத்தின் போது, பிளேட் AA69 Dh 6 மில்லியனுக்கு விற்கப்பட்டது, அதே நேரத்தில் AA999 தகடு Dh 4.05 மில்லியனை பெற்றது.
AA-IJLMNOPRSTUVWXYZ உட்பட பல்வேறு வகைகளில் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து இலக்கங்களைக் கொண்ட 90 ஃபேன்ஸி பிளேட்களை ஆணையம் வழங்கியது.
#tamilgulf