எமிரேட்டின் மூன்று நாள் சூப்பர் விற்பனையில் 90 சதவீதம் வரை தள்ளுபடி!

துபாயில் இந்த வார இறுதியில் அதிரடி தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது. எமிரேட்டின் மூன்று நாள் சூப்பர் விற்பனையில் சில்லறை விற்பனையாளர்கள் பல தயாரிப்புகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றனர்.
துபாய் முழுவதும் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட கடைகளில் 500 க்கும் மேற்பட்ட பிராண்டுகள் நவம்பர் 24 வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளன..
“அசாதாரண விற்பனையின் மூன்று நாள் தொடக்கத்தில் கருப்பு வெள்ளியுடன், வார இறுதி முழுவதும் துபாயில் உள்ள மால்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களில் இன்னும் சிறப்புச் சலுகைகளைக் பெறுங்கள்” என்று விசிட் துபாய் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
கருப்பு வெள்ளி என்பது கிறிஸ்துமஸ் ஷாப்பிங் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதனை முன்னிட்டு கடைகள் பெரிய சலுகைகளை வழங்குகின்றன.
மூன்று நாள் சூப்பர் சேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும். லைப் ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், அழகு மற்றும் ஹோம்வேர் தயாரிப்புகளில் சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது.



