ஓமன் செய்திகள்
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு: இந்திய ஜனாதிபதிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய ஓமன் சுல்தான்
மஸ்கட்: இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தியை சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.
மாண்புமிகு சுல்தான், இந்திய ஜனாதிபதிக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நட்பு இந்திய மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு 80 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி பெறப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை அனுமதித்ததே விபத்துக்கு காரணம் என்று காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#tamilgulf