ஓமனின் சில பகுதிகளில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

மஸ்கட்
ஓமனின் வடக்கு அல் ஷர்கியா மற்றும் தெற்கு அல் ஷர்கியா கவர்னரேட்டுகளின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், சில பள்ளத்தாக்குகள் மற்றும் மேடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஓமன் கடல் மற்றும் முசந்தம் கவர்னரேட்டின் கடற்கரைகளில் குவிந்த மேகங்கள் பரவலான மழைக்கு வழிவகுக்கும் என்று ஓமன் வானிலை ஆய்வு மையம் தனது சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பொதுவாக, இன்று வடக்கு மாகாணங்கள் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு மற்றும் தெற்கு அல் ஷர்கியாவில் மழை மற்றும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. முசந்தம், ஓமன் கடல் பகுதிகள் மற்றும் அல் ஹஜர் மலைகள் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஓமன் வானிலை மேலும் கூறுகையில், “தெற்கு அல் ஷர்கியா, அல் வுஸ்தா மற்றும் தோஃபர் மாகாணங்களின் சில பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை குறைந்த மேகங்கள் அல்லது பனிமூட்டங்களுக்கு வாய்ப்புள்ளது. மேலும் இந்த பகுதிகளில் தனித்தனியாக மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.