தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் கொடியுடன் ஒளிர்ந்த புர்ஜ் கலிஃபா

பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினத்தையொட்டி, புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா பாகிஸ்தான் கொடியுடன் நேற்று ஜொலித்தது .
முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்கள் அபுதாபி மற்றும் துபாயில் இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகளை நடத்தியது, இதில் ஏராளமான சமூக உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் தூதர் பைசல் நியாஸ் திர்மிசி, பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னேற்றம் மற்றும் செழிப்பில் பாகிஸ்தானியர்கள் ஆற்றிய முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பொருளாதார சவால்களை முறியடிப்பதில் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.



