விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகன் தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு, தளபதி 68 படத்துக்காக இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவா? அல்லது அனிருத்தா? என்ற ரசிகர்களின் கேள்விக்கும் விடை கிடைத்திருக்கிறது. புதிய கீதை படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணையவிருக்கின்றனர்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி கலைஞர்கள் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் சர்வதேச தரத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்து, ”என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா.