அபுதாபி அல் சதா பாலத்தில் ஜூன் 23 முதல் புதிய வேக வரம்பு; ITC அறிவிப்பு

ஜூன் 23 முதல், அபுதாபியின் பிரதான அல் சதா பாலத்தில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் புதிய வேக வரம்பு நடைமுறைக்கு வருகிறது. இந்த நடைமுறை டிசம்பர் 2023 இறுதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று அமீரக போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
வரும் வெள்ளிக்கிழமை முதல் ஷேக் சயீத் பின் சுல்தான் தெருவில் உள்ள பாலத்தின் இரு திசைகளிலும் வேக வரம்பு 80 கிமீ வேகத்திற்கு குறைக்கப்படும் என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.
ஓட்டுநர்கள் போக்குவரத்து குறியீடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.
மேலும் அது “இந்த வேக குறைப்பு நெரிசலைக் குறைக்கவும், அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும்” என்று கூறியது.