அன்னையர் நன்கொடை பிரச்சாரத்திற்கு 3 மில்லியன் திர்ஹம் வழங்கிய அபுதாபி இஸ்லாமிய வங்கி
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட அன்னையர் நன்கொடை பிரச்சாரத்திற்கு ஆதரவாக முன்னணி நிதி நிறுவனமான அபுதாபி இஸ்லாமிய வங்கி (ADIB) 3 மில்லியன் திர்ஹம் வழங்கியுள்ளது .
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் கல்விக்கு நிலையான ஆதரவை வழங்குவதற்காக 1 பில்லியன் Dhs உதவித் தொகை நிதியை நிறுவுவதன் மூலம் தாய்மார்களை கௌரவிப்பதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Mohammed bin Rashid Al Maktoum Global Initiatives (MBRGI) மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரச்சாரத்தின் வருமானம், மில்லியன் கணக்கான பின் தங்கிய நபர்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையை நடத்த தேவையான கருவிகள் மற்றும் திறன்களை வழங்குவதற்காக, மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து கல்வி திட்டங்களை செயல்படுத்தும்.
பிரச்சாரம் தொடங்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு , இதுவரை 770 மில்லியன் Dhs நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளது.