“ஐஸ்வர்யா ராய் நடிக்கட்டும், நீங்கள் மகளை பார்த்து கொள்ளுங்கள் ” ரசிகரின் வேண்டுகோளுக்கு அபிஷேக் பதில்…!

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாக வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் -2 படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருவதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா நடித்து உள்ளார்.பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஐஸ்வர்யா சிறப்பாக நடித்துள்ளார் என பாராட்டு கிடைத்து உள்ளது. இதற்கிடையில், ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சன் ஒரு ரசிகரின் கருத்துக்கு வேடிக்கையான முறையில் பதிலளித்தார்.
பொன்னியின் செல்வன் 2 பற்றி ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக்( abhishek bachchan) ஒரு டுவிட் செய்து இருந்தார். அதில் “பொன்னியில் செல்வன் 2 மிகவும் அழகாக இருக்கிறது. என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. மணிரத்னம், விக்ரம், திரிஷா, ஜெயம்ரவி, கார்த்தி மற்றும் சக்தி வாய்ந்த கருப்பொருளை வழங்கிய மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள். மேலும் என் மனைவியின் நடிப்பை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இது உங்களின் பெஸ்ட்” என்று ஐஸ்வர்யாவை டேக் செய்துள்ளார் அபிஷேக்.
இந்த டுவீட்டுக்கு ஒருவர் பதில் அளித்துள்ள ஒருவர் . “நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிக்கட்டும். நீங்கள் ஆராத்யாவை (ஐஸ்வர்யா அபிஷேக் தம்பதியரின் மகள்) பார்த்து கொள்ளுங்கள்” என கூறி இருந்தார். இந்த டுவீட்டுக்கு பதில் அளித்த அபிஷேக் “அவர் கண்டிப்பாக படம் செய்யட்டும், குறிப்பாக ஐஸ்வர்யாவுக்கு பிடித்த ஒன்றை செய்ய, நான் ஏன் அனுமதி மறுக்க போகிறேன்” என கூறி உள்ளார்.
அபிஷேக்கின் ட்வீட்டுக்கு ஆதரவாகப் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். அதைத்தான் உண்மையான கணவர்கள் செய்ய வேண்டும் என்றார் அபிஷேக். மனைவிகளும் சுதந்திரமான நபர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் பரிந்துரைத்தனர்.