நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், மழையில் சிக்கி இளம் இந்திய வெளிநாட்டவர் பலி

ஓமனில் தனது நிச்சயதார்த்த விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு, பலத்த மழையில் சிக்கி ஒரு இளம் இந்திய வெளிநாட்டவர் தனது உயிரை இழந்தார். அவரது அகால மரணம் குறித்த செய்தி அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதான அப்துல்லா வாஹித், தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் திங்கள்கிழமை சூரிலிருந்து மஸ்கட் திரும்பியபோது, இப்ராவில் ஒரு வாடியைக் கடக்கும்போது அடித்துச் செல்லப்பட்டார். அவரது சக ஊழியரான ஓமானியர் தப்பித்த நிலையில் வாஹித் உயரிழந்தார்..
“வாழ்க்கையின் புதிய பயணத்தைத் தொடங்கும் விளிம்பில் இருந்த ஒரு இளைஞனின் உயிரைப் பறித்த சோகமான விபத்து குறித்து நாங்கள் மனம் உடைந்துள்ளோம்” என்று மஸ்கட்டில் உள்ள கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் (கேஎம்சிசி) பிரதிநிதி முகமது வானிமேல் கூறினார்.
வாஹித்தின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி 16 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது, எனவே, அவரது குடும்பத்தினர் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில், அவரது வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். இருப்பினும், அவர் உயிரிழந்த செய்தி அவர்களின் மகிழ்ச்சியை துக்கமாக மாற்றியுள்ளது.
தீவிர மழையில் சிக்கிய வாஹித், மீட்புக் குழுவினர் உதவுவதற்குள் அடித்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம், இயற்கையின் சீற்றம் மற்றும் மழையின் போது வாடிகளைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் எச்சரிக்கைகளை அனைவர் மனதிலும் நினைவுபடுத்தியது.