இஸ்லாம் மதத்திற்கு மாறி உயிரிழந்த பெண்ணின் நினைவாக புதிய மசூதி
சமூக ஒற்றுமை மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் வகையில், இஸ்லாமியத்தை தழுவிய சில நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் காலமான உக்ரேனிய வெளிநாட்டவரான டாரியா கோட்சரென்கோவின் நினைவாக துபாயில் புதிய மசூதி கட்டுவதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது .
டாரியா இஸ்லாம் மதத்திற்கு மாறிய சிறிது நாளில் மரணம் அடைந்ததால் இஸ்லாமிய தகவல் மையத்தை நடத்தும் Dar Al Ber Society, அவரது பெயரைக் கொண்ட மசூதியைக் கட்டும் திட்டத்தை மேற்கொள்ளுகிறது. அவரது திடீர் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
துபாயில் 812 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் டாரியா கோட்சரென்கோ மசூதியை நிர்மாணிப்பதற்கான நன்கொடைகளை சேகரிக்க ஒரு சிறப்பு இணைப்பு (https://contribute.daralber.ae/mosahmats/View/27033) உருவாக்கப்பட்டது.
ஏப்ரல் 4, வியாழன் மாலை நிலவரப்படி, தேவையான கட்டுமான பட்ஜெட்டில் சுமார் 13 சதவீதம் சேகரிக்கப்பட்டுள்ளது.